Ind vs eng: Cricket News & Match Updates
இந்த வெற்றிக்கு அவர்கள் தகுதியானவர்கள் தான் - ஜோஸ் பட்லர்!
ஐசிசி ஆடவர் டி20 உலகக் கோப்பை தொடரில் நேற்று நடைபெற்ற இரண்டாவது அரையிறுதி போட்டியில் இந்தியா -இங்கிலாந்து அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய இந்திய அணி ரோகித், சூர்யகுமார் ஆகியோரிடன் அதிரடியால் 20 ஓவர் முடிவில் 171 ரன்கள் எடுத்தது. இதில் இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக ரோஹித் சர்மா 57 ரன்களையும், சூர்யகுமார் யாதவ் 47 ரன்களையும் சேர்த்தனர். இங்கிலாந்து தரப்பில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய கிறிஸ் ஜோர்டன் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இதையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய இங்கிலாந்து அணியானது அக்ஸர் படேல் மற்றும் குல்தீப் யாதவின் பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். இதனால் அந்த அணி 16.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 103 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அந்த அணியில் அதிகபட்சமாகவே ஹாரி புரூக் 25 ரன்களைச் சேர்த்திருந்தார். இந்திய அணி தரப்பில் அக்ஸர் மற்றும் குல்தீப் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இதன்மூலம் இந்திய அணி 68 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி வெற்றிபெற்றதுடன், இறுதிப்போட்டிக்கும் முன்னேறி அசத்தியுள்ளது. Read More...